மனிதாபிமானம் காப்போம்
--------------------------------------------------------
எம்மதமாயினும் சம்மதம் என்னும் எண்ணம் எம்மனம் ஏற்க எதுகை மோனை இன்றி எழுதிடுவோம் காவியக்கல்வெட்டு-வாருங்கள்.
மறப்பதும் மன்னிப்பதும் மனிதத்தின் பண்புகள் என்பதை மறுமலர்ச்சி செய்வோம்-வாருங்கள்.
பொறுமையாய் போனமையால் பூதலத்தோர் வேண்டுவது இன்னுமொரு காந்தியைத்தான்.
சுதந்திர பெருமையை உணர்த்தியமையால் சுவர்க்கமும் கேட்பது எட்டையபுரத்து பாட்டையாவைத்தான்.
பெற்றெடுக்க பொறுத்திருந்த தாயும், பிறப்பதற்கு காத்திருந்த சேயும் பொறுமைக்கே கிடைத்த பெருமை.
அடிமைகளாயினும் ஒற்றுமை பாராட்டுங்கள்.
இறக்கும் போதும் எவரும் பசியோடு இறந்தால் பாவத்திற்குரியவர் நாம் என பரைசாற்றுங்கள்.
மீண்டும் பிறப்பதற்கு கருவறை தேடும் மகான்கள் அல்ல நாம்.
இறந்த பின்பு புதைக்கும் நிலத்தை பார்க்கும் பாக்கியசாலிகள் அல்ல நாம்.
எம்மதத்திற்கும் சாத்தியமே இது.
எக்குலத்திற்கும் உண்மையே இது.
மனிதனின் தவறுகளை சுட்டிக்காட்ட இவ்வுலகம்.
சுட்டிக்காட்டி சிலரை கொல்வதற்கு துடிக்கும் மனிதம்.
நீக்கிவிடுங்கள் இவற்றை உலக அகராதியில் இருந்து,
கோபத்தால் குழம்பி அன்பை இழந்து இறையுணர்வு இன்றி இருக்கும் மனிதத்திற்கு நம்பிக்கையாக இக்கவிதை.
இருபத்தோராம் நூற்றாண்டில் கவிதையில் கருவாகும் மனிதாபிமானம் மனிதனின் மனதில் பிறக்கட்டும்.
விதைத்த விதைகள் மண்ணெண்ணும் கருவறையிலேயே காணாமால் போகுமுன்,
விருட்சங்கள் வெப்பத்தால் சருகாக மாறும் முன்,
வெட்கமின்றி கேளுங்கள் எம் தவறுகளுக்கு மன்னிப்பு.
பொறுமையாக இருப்பதால் தான் புவி நம்மை தாங்குகிறது.
புவியை தோற்கடிக்கும் பொறுமையை மனிதனுக்குள் உற்பத்தி செய்வோம்.
கருவறையில் தனியாக இருக்கும் போதே நம்பிக்கை மனிதனுக்குள் வந்துவிட்டது. இல்லாமல் போயிருந்தால் மனிதம் என்றோ இறந்திருக்கும்.
நன்றி
Related