யாவரும் கேளீர் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட அறிந்திருக்கும் கூடி வாழ்வது கோடி நன்மை என்று இதை ஆறறிவு கொண்ட இம் மனித இனம் இன்னும் அறியாதது ஏனோ ? நாளை நிரந்தரமில்லா உலகினில் எதுவுமே நிச்சயமற்ற வாழ்வினில் இன, மத பேதத்தை நிலைநாட்ட முயற்சித்து அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை பாராய் ! இருக்கின்ற ஓர் வாழ்வு ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழ வேண்டும் உன் மதத்தைப் போல பிற மதங்களையும் நேசி உன் தாய்மொழி போல ஏனைய மொழிகளையும் மதி ! உனக்கு ஒரு நம்பிக்கை இருந்தால் மற்றொருவனுக்கு அது வேறொரு வடிவில் இருக்கும் எவ்வாறாயினும் நம்பிக்கை என்பது ஒன்றே என்பதை புரிந்துக்கொள்! இறந்தவனை பார்த்து மண் கூறுவது இல்லை "என்னில் அடைக்கலம் பெற வேண்டுமானால் நீ இம் மதத்தை சார்ந்திருக்க வேண்டும்" என்று அதேப்போல் இறைவன் கூறவில்லை "என் மக்களுக்கு மட்டும் தான் மழை தருவேன்" என்று ஆனால் இவற்றை சார்ந்திருக்கும் மனித வர்க்கம் மட்டும் துடிப்பது ஏன் இந்த இன, மத வெறிக்கு ? பொறுமைக்கும் அன்புக்கும் கிடைக்கும் மதிப்பு உலகில் வேறெதற்கும் இல்லை மன்னிக்கும் குணம் உன்னை இந்த தரணியில் தாழ்த்தப்போவது இல்லை என்பதை தெரிந்துக்கொள் "நேற்று" அணை கடந்த வெள்ளம் போல "நாளை" கணிக்க முடியாத காலம் போல "இன்று "மட்டுமே நிலையானது இவ் உலகைக் கட்டிப்போடு உன் உண்மையான அன்பால் மட்டும்Pavithra Pavithra