மதமும் மனிதாபிமானமும். மாந்தர் நமக்கு மதமதில் சுதந்திரம் உண்டு.. மனிதாபிமானம் எம்மில் மறையாதிருக்கும் வரையினில்... மாந்தர் நாமே நம்மை குறை கூறித்திரிகின்றோமே அன்றி. மனிதாபிமானத்தில் எம்மதமும் குறைவைத்திடவில்லை எமக்கு... நாம் பிறக்கையிலே நம்மோடு மதமொன்றும் பிறந்திடவில்லை. நமக்கான மதமோ நம் சுதந்திரமன்றி வேறில்லை.. நம் நம்பிக்கையது நம்மோடு இருக்கும் வரையினில்... நம் சுதந்திரமதில் கை வைத்திடும் உரிமை எவருக்குமில்லை இங்கு... மதச் சுதந்திரமது மாந்தர் எமக்கு இருப்பதால் என்றும் மனிதாபிமானம் மடிந்திடவும் கூடாது....மனித நேயமது தொலைந்திடவுமாகது... கோடிக்கணக்காய் மனிதர்கள் வாழ்ந்திடும் வையகமதில் கோடான கோடி குணங்களும் தான் கொட்டிக்கிடக்கையில்... மனிதாபிமான குணங்களாம் நம்பிக்கை, பொறுமையென அவை சிதறுண்டு கிடக்கையில் மானிடன் அள்ளி எடுப்பதில் ஏதும் குறைந்திட போவதுமில்லை... எம் நம்பிக்கைகள் எமக்கானது.. எம் உரிமை என்றெண்ணி மனிதாபிமானம் மடிந்தால் இங்கு மனிதமும் மடிந்தே போகும்.. இதில் எவ்வித ஐயமுமில்லை...