தலைப்பு : ஒரு மதம் அல்லது நம்பிக்கையை பின்பற்றுவதற்க்கான சுதந்திரத்திற்கான மன்னிப்பு, பொறுமை மற்றும் நம்பிக்கை போன்ற மனிதாபிமான குணங்கள் -------------------------------------------------------------------------------------------------------------------------------------- ● ஆதி தொட்டு தொடர்ந்து வரும் அர்த்தமற்ற ஆயிரத்தில் சாதி ,மதம்,மேன்மை ,குலம் முந்திக்கொள்ள காரணமேன் ? அணுவைப்பிளந்து ஆராய்ச்சி கூட மதில் மேற்குலகு என்றிருக்க, வெறும் மனுவை வைத்து வாழ்வியலை தீர்மானிக்கும் மானுடமாய் நாமிருக்க ● கறுப்பினம் என்றாலே காலடியில் எனும் காலனித்துவத்தின் மத்தியில், காட்டி நிற்கிறது நம் நாட்டில் சுதந்திரத்திற்கான மனிதாபிமானம் மனித மனங்களின் முன்னேற்றமே சமுதாயத்தின் மாற்றமாய் மாற சாதி குல பெருமைகள் எல்லாம் சாய்த்து விட்டு மனிதம் எனும் சால்வையை போட ● ஆபத்து வேளையிலும் அவசர தேவையிலும் அயலவர் உதவியை நாடியே நாங்கள் அதில் அவர் இன மதம் பார்க்காத மனிதாபிமானமே தலையோங்கல் என்னுயிர் என் மதத்திற்கே என்று உறுதி எடுப்பவர் கூட உயிராபத்து எனும் நிலையில் தன் குருதி கொடுப்பவர் தான் இங்கே வாழ்கின்றது மதச்சுதந்திரத்திலும் மனிதாபிமானம் ● விதை பயிர் எல்லாம் விளை நிலமாக முடியாது களை பயிர்கள் இருக்கும் வரையில் களைகளை களைய வேண்டும், மதவாதிகளிடம் மனிதம் எனும் பயிரை காக்க எண்ணிக்கையில் நம்பிக்கைகள் ஏராளம் என்றாலும் மன்னிப்பையும், பொறுமையும் கற்றுத்தருவத்தில் எல்லாமே ஒன்று தான்