நம் நாட்டில் பல மதம் உண்டு பல நம்பிக்கை உண்டு. நம்பிக்கை உள்ளவன் கடவுளை வணங்குகிறான். அதனை உண்மை என்று ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறான். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கடவுளையும் மதத்தையும் விமர்சனம் செய்கிறான். மதம் அவரவர் சுதந்திரம். ஒரு மதம் அல்லது நம்பிக்கையை பின்பற்ற வேண்டுமாயின் அதற்கான சுதந்திரமும், பொறுமை மற்றும் நம்பிக்கை போன்ற மனிதாபிமான குணங்களும் முக்கியமானதாகும். மனிதர்களாகிய நாம் அனைவருமே பல நம்பிக்கைகளை வைத்திருப்போம். உலகத்தை பற்றி நம்பிக்கை வைத்திருப்போம், எம்மை பற்றியும் நிஜத்தை பற்றியும் கூட நாங்கள் ஒரு நம்பிக்கை வைத்திருப்போம். ஆனால் நம்பிக்கை என்றால் என்ன ? நம்பிக்கை என்பது பற்றிய உண்மையான அர்த்தமே தெரியாமல் நாங்கள் பல நேரங்களில் "நம்பிக்கை" எனும் வார்த்தையை பயன்படுத்துகிறோம். குறிப்பாக மதங்களில் கூறப்படும் காரியங்களை எந்தவிதமான காரணமும் ஆதாரமும் இல்லாமல் அப்படியே நம்பவேண்டும் என்று சிலர் நினைக்கிறீர்கள். ஆனால் இது தவறு, கண்மூடித்தனமாக ஒரு விஷயம் இருக்கு என்ற நினைப்புதான் நம்பிக்கையா, இல்லை; கடவுள் இருக்கிறாரா என்ற உண்மையை நாம் உறுதியாக தெரிந்து கொள்ள முடியும். கடவுள் இருக்கிறார் என்பதற்கு பல அசைக்க முடியாத காரணங்களும் ஆதாரங்களும் உள்ளன. முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களிடம் ஏதோ கடவுள் இருக்கிறார் என்று செல்ல வில்லை, மாறாக எங்களது நம்பிக்கை உண்மை என்று சொல்கின்றோம். அதுமட்டுமன்றி ஏன் கடவுள் உண்மை என்றும் ஆதாரங்களையும் நாங்கள் கூறுகிறோம். ஒரு விஷயத்தை உண்மை என்று கண்மூடித்தனமாக நம்புவதற்கும், அதே விஷயத்தை உண்மை என்று தெரிந்து கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த உண்மையை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. நம்பிக்கை எனும் வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன, (Belief that and belief in) " Belief That " என்றால், ஒரு விஷயத்தை உண்மை என்று அறிந்தும் அதனை உண்மை என்று ஏற்றுக் கொள்வது. உதாரணமாக நாம் ஒரு மரத்தை உண்மை என்று தெரிந்து கொண்டும், அது பற்றி அறிந்து கொண்டும், அது இருக்கு என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அது உண்மை என்றும் நம்புகிறோம். " Belief in " என்றால் நீங்கள் ஒருவர் மீது அதிக நம்பிக்கை வைப்பதாகும். உதாரணமாக அப்பா, அம்மா போன்று ஏதோ ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதாகும். இதில் நாம் சில நம்பிக்கைகளை முக்கியமானதாகவும், சில நம்பிக்கைகளை முக்கியமல்லாததாகவும் நினைக்கிறோம். யாரேனும் ஒருவர் உங்களிடம் வந்து நீங்கள் நம்பு என்ற காரியத்தை உண்மை இல்லை என்று சொன்னால், நீங்கள் இது என்னுடைய நம்பிக்கை உங்களுடைய நம்பிக்கையை என் மீது திணிக்காதே என்று சொல்கின்றீர்கள், சிலர் அது அவர்களுடைய நம்பிக்கையில் நீங்கள் தலையிடக்கூடாது என்று சொல்கின்றீர்கள். இப்படி கண்மூடித்தனமாக காரணம், ஆதாரம் எதுவுமில்லாமல் ஒரு விஷயம் இருக்கு என்று நினைப்பது தான் நம்பிக்கையின் அர்த்தம் என்று சிலர் நினைக்கிறீர்கள். ஒரு நம்பிக்கையை மனப்பூர்வமாக ஏற்று அதனைத் தழுவுவது ஒருவரது அடிப்படை உரிமை, அதில் குற்றம் காண்பதற்கு இடமில்லை. ஒவ்வெரு குடிமகனும், தான் அல்லது தன்னுடன் இணைந்து கொண்ட மற்றவர்களுடன் கூடி, பொதுவாக அல்லது தனியாக தனது மதத்தை அல்லது தனது வழிபடும் நம்பிக்கையைப் பிரகடனம் செய்யவும், அதை பின்பற்றவும், அதை நடைமுறைப்படுத்தவும் அதை போதிக்கவும் உரித்துடையவராகிறான். மதம் அவரவர் சுதந்திரமும் உரிமையும் ஆகும். அதை தடுக்க யாராலும் முடியாது அது மட்டுமல்ல ஒரு மதம் சார்ந்தவர் இன்னொருவரது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ விமர்சனம் செய்யவும் குறை கூரவும் கட்டாயப்படுத்தவும் எந்தவொரு உரிமையும் கொடுக்கப்படவில்லை. மத நம்பிக்கை இல்லாதவர் பிறர் நம்பிக்கையை விமர்சனம் செய்ய தகுதியற்றவர். உலக மதங்கள் குறித்து எல்லா மதங்களின் அடிப்படை இறையுணர்வு மற்றும் அறநெறி ஆகும். அடுத்த மதத்தினரின் மனம் சார்ந்த, மதம் சார்ந்த நம்பிக்கையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் முன்னோடியாக இருத்தல் வேண்டும். மதம் அல்லது நம்பிக்கையை எந்தவித தடைகளும் இல்லாமல் பின்பற்ற சுதந்திரமும் மன்னிப்பும் முக்கியமானதாகும். ஒரு மனிதனுக்கு அந்நாட்டு அரசு தனிமனித சுதந்திரத்தை வழங்கி இருப்பதுடன் பல்வேறு சுதந்திரத்தையும் பிரித்து வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். சுதந்திரம் என்றால் என்ன ? பல ஆண்டுகளாய் எத்தனை குழப்பமான கேள்விகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை தரக்கூடிய கேள்வி. ஆனால், எல்லா பதில்களுமே சரியானது. எவையெல்லாம் நம் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முயல்கின்றதோ அல்லது தடுக்கின்றதோ அதைவிடுத்து வெளியேறுவதையே சுதந்திரம் என்ற உணர்வாய் பார்க்க பழகியிருக்கிறேன். இது நிரந்தரமான மகிழ்ச்சியா, அல்லது தற்காலிகமானதா என்பதை புரிந்து கொள்ள நம் அறிவு உதவுகின்றதா..!!? இன்று நம் நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. தனிமனித சுதந்திரம் என்பது, நாம் செய்யும் செயல்களை பொருத்தது. உதாரணமாக நமக்கு பிடித்த உணவை நாம் உண்ணலாம். ஆனால் அதே உணவை நம் குழந்தைகளும் உண்ண வேண்டும் என்று நினைப்பது தவறு. இன்றைய காலகட்டத்தில் பதின் வயதினர்கள் எங்களுக்கு சுதந்திரம் இல்லை எங்களை கண்டிப்புடன் நடத்துகின்றனர் என்கிறார்கள். நம்பிக்கையை பொருத்த வரையில் சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. இது தனிமனிதனின் உரிமை, சுதந்திரத்தையும் உரிமையையும் கட்டிக் காப்பவனே ஒழுக்கமுள்ள குடிமகன். இந் நாட்டில் பல மதமும் பல நம்பிக்கையும் பின்பற்றப்படுகிறது என்றால் அதற்கான சுதந்திர மன்னிப்பும் கொடுக்கப்பட வேண்டும் அல்லவா ? ஆம், கட்டாயம் கொகொடுக்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் குடிமகன் தனிமனித உரிமையோடு சுதந்திரமாக வாழ்கிறான் என்றால் அவனுக்கு அரசோ அல்லது சமூகமோ மன்னிப்பை கொடுப்பது எவ்விதத்திலும் தவறில்லை. மன்னிப்பு எத்தனை உன்னதமான ஒரு காரியம். எப்படிப்பட்ட மனிதர்கள் மன்னிப்பார்கள், நிச்சயமாக மன்னிக்கும் இருதயமுடைய மனிதனாலேயே மன்னிக்க முடியும். சில நேரத்தில் சிலரை மன்னிப்பது என்பது முடியாத காரியம் போல் தோன்றும் ஆனால் மனம் உள்ள மனிதரால் மட்டுமே ''மன்னிப்பு'' என்ற வரம் தர முடியும். அதை பெரியவர்களுக்கு கொடுத்தால் என்ன, சிறியவர்களுக்கு கொடுத்தால் என்ன, மன்னிப்பு கேட்பதால் நாம் கோழையும் இல்லை. அதை வழங்குவதால் நீ குறைந்தவரும் இல்லை. இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் தண்டனையை வழங்க முடியாது. மதம் அல்லது நம்பிக்கை சார்பில் பார்க்கப்போனால் அவரவர் மதத் தலைவர்கள் தவறினை ஏற்று மன்னிப்பு வழங்க வேண்டும். யார் இங்கு மன்னிக்கிறார்களோ அவர்களின் உள்ளம் தூய்மையாகின்றது. தவறு செய்தவர் தன் தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று இருந்தால், அவர்களை மன்னிப்பால் மட்டுமே திருத்த முடியும். இங்கு தண்டிக்க உரிமைகள் இல்லை, மன்னிக்கவே உரிமைகள் உள்ளது. மதம் அல்லது நம்பிக்கையை பின்பற்ற மனிதாபிமான குணங்கள் முக்கியமானதாகும். சுருக்கமாக சொல்லப்போனால் பொறுமை என்பது நமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும்போதும், பிரச்சினைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும்போதும், சில அசாதாரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் சிறந்த குணம் ஆகும். இந்த குணமானது தமிழ், இஸ்லாம், இந்து, பௌத்த போன்ற மதத்தவர்களிடையில் பேணவும்,தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கவும் பல சந்தர்ப்பங்களில் உதவுவதோடும் நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்தையும் தொடரச்சியாக பேணுவதற்கும் உதவி புரிகின்றது. மற்றும் நம்பிக்கை என்பது ஒருவரை புரிந்து கொண்டு அவற்றை உண்மை என்று ஏற்று செயற்படுவதும் ஆகும். மனிதத்தை வளர்க்கவே மதம், மத நம்பிக்கையை மனதிலும், மனிதத்தை அரசியலிலும் விதைப்பதே ஆன்மீக அரசு. எனவே தனி நபரொருவரின் குற்றத்திற்கு அவரின் மதமோ, சமூகமோ பொறுப்பாகாது. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கையே பிரதானமாகும். அதாவது, மத நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரத்திற்கான மன்னிப்பு, பெறுமை மற்றும் நம்பிக்கை போன்ற மனிதாபிமான குணங்கள் எனத் தலைப்பிடப்பட்டுள்ள சரத்தானது, ஒவ்வொரு மனிதனுக்கும், சிந்தனை, மனசாட்சி, மதச் சுதந்திரத்தை வழங்குவதுடன், மேற் கூறப்பட்ட மனிதாபிமான குணங்களை மக்கள் யாவரும் நல்ல முறையில் கடை பிடித்து வாழ்ந்து வருவதோடு ''பல கடவுள் பல மதங்கள் பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றைத் தேர்ந்திடல் '' வேண்டும். உலகின் மதங்கள் அனைத்தும் மனிதாபிமான குணங்களுடன் ஒன்று பட்டு மனிதனை நல் வழிப்படுத்தி மதத்தை சார்ந்திருக்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் இதை உணர்வோம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.!!