உலகிற்கு பொதுவாய் அறமொன்றை செதுக்கி/ ஊர்களில் யாவரும் கேளீர் என்போம்/ சிறையில் அடைந்த சிந்தையை திறந்து/ சிதைந்த மனங்களில் விதைப்போம் மனிதம்/ கொள்கையும் கோசமும் பலவாய் இருந்தால்/ கொண்ட இலட்சியம் பெறுவது எப்போது/ ஆக்கல் கடினம் அழித்தல் இலகு/ ஆண்டவன் விதித்த நியதியில் ஒழுகு/ உண்மைக்கு பயந்து பொய்யை வியந்து/ ஊருக்கு நடித்து உயர்ச்சியில் இருப்பவர்/ ஒருநாள் விழுவார் சகதியில் அமிழ்வார்/ ஒருவரும் விடுபடார் தர்மத்தின் தீர்ப்பில்/ அளவுக்கு மீறிய செல்வமும் விடமே/ அன்பை கொடுத்திடு அயலும் நமதே/ முயலை வென்ற ஆமையும் உண்டு/ முயற்சியே என்றும் மேன்மையே நம்பு/ முடிவுறும் வாழ்க்கையில் முடிவுறா ஆசைகள்/ முழுவதும் தெளிவுற முடிந்தன நாட்களும்/ வாழ்ந்திடும் காலத்தை வரமென கொண்டிரு/ வசந்தமும் வருமே வாசலின் முன்னே...
Dhatchanamoorthi karitharan