புதுக்கவிதை இனி எப்போ மழை வரும் என்று காத்துக்கொண்டிருக்கும் மண் போலவே இனி எப்போ புனிதம் வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறது மனிதம் மதங்கள் அழகு தான் அவை உருவாக்கப்பட்ட நோக்கமும் அழகு தான் ஆனால் உணரத்தான் எமக்கு நேரமில்லையே இயந்திரங்களாய் மாறி இங்குமங்கும் இயங்குகிறோம் இறை நம்பிக்கையை சிறிதும் உணர மறுக்கிறோம் இஷ்டத்துக்கு வாழ்ந்து விட்டு கஷ்டமென்ற போது மட்டும் கடவுளை நம்புகின்றோம். சகித்து, சகமனிதம் உணர்ந்து அன்போடு பழகி குற்றம் மன்னித்து தவறுகள் பொறுத்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இனியாவது ஒன்றாக வாழ்வோமா சகோதரர்களே??? ~நன்றி
Divya Punniyamurthi