தலைப்பு: மனித மார்க்கம் - மதம் புதுக்கவிதை பிறவி முதல் விழி ஒளி இழந்தோன் - தன் இருள் உலகில் வழி காணக் கொண்ட வெண் பிரம்பன்ன மாயை சூழ் கரி உலகின் ஒப்புரவு வாழ்வின் ஒளி தேடி காற்றிற் கை நீட்டித் தேடா வண்ணம் கரை சேர்க்கும் பாங்கில் மனிதன் படைத்தவோர் மார்க்கம் மதம்! பிறவி கண்ட சிசுவொன்று தன் மதம் யாதென்று அறியாது உலகியல் நம்பிக்கைகள் எதுவும் அறியாது வனத்தில் துளிர்த்த மரமொன்று நிலத்தின்னின்று பிற மரங்கள் விலத்தி தன்னுடல் வளைத்து ஒளி காணும் இடைவெளிகளில் புகுந்து-அச் சூரியன் நோக்கி கை நீட்டுதல் போலே ஞாலத்தில் முளைத்த மாந்தரெலாம் சமூக விதிகள் தாண்டி மதத்தின் பால் கரம் நீட்ட சுதந்திரம் உண்டே! கோள்கள் சிதறிக்கிடந்தாலும் சூரியக் கவர்ச்சி ஒன்றாகும் மத நாமம் பலவெனினும் வாழ்வின் மலர்ச்சி ஒன்றாகும் கல்லினின்றும் கடலினின்றும் காற்றின்னின்றும் மரத்தின்னின்றும் காணும் கடவுளர்கள் நித்திய மனித்திலும் உண்டு பிறிதொருவர் மதம் அது - அவர் பிறப்பின் நிச்சயம் அன்றன்றோ! மாற்றான் மதம் பற்றி மரியாதை காண்பித்து பொறுமை கொண்டு சகித்து நடந்து நம்பிக்கை கொள்தல் நலமான நாளையை உருவாக்க விதைக்கும் விதையாகும்...
Yashodaran Gaurisangar