மனிதனாவோம். --------------------------- வாருங்கள்; பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மனிதனாவோம். சிற்றெறும்பொன்றை மிதித்தொழிக்கப் புறப்படும் பாதங்களை நகர்த்தி வைப்போம். இவ்வையகத்தில் வாழ அவைகளின் அவாக்களுக்கும் இடமீய்ந்து இன்புறுவோம். அநாதை என்றொரு சொல் ஒழிய அன்பினால் அவர்கட்கு உறவாவோம். ஏழையின் இல்லத்தில் எழுத்தறிவை ஊற்றுவோம். மழலையர் மனதினில் நல்ல போதனைகள் விதைப்போம். ஈன்றோரின் இதயத்தை சிதைவின்றி காப்போம். இயற்கையை கொலை செய்யத்துணியும் கொடூர சிந்தனையில் பூச்செடிகளை நட்டு வைத்து மலர்வோம். நமது கரத்தின் பிடிப்பையும் நாவின் வார்த்தைகளையும் அன்பு வண்ணங்களால் அலங்கரிப்போம். பொறுமையில் மூழ்கி மன்னிப்பில் உதித்து மனிதத்துடன் பிறந்து, யாதுமாகி அவன் அருளிய படி ஓதுவோம் தினம் அவன் சொல்லடி.
Priyansish Thimothish