ஒரு மதம் அல்லது நம்பிக்கையை பிண்பற்றுவதற்கான சுதந்திரத்திற்கான மன்னிப்பு,பொருமை மற்றும் நம்பிக்கை போன்ற மனிதாபிமான குணங்கள் __________________________________________ நேயம் கொண்டு நீ உயர நேரமொன்று ஒதுக்கு நேர்மை கொள்ளாத வாழ்வுக்கு நான்கு மதமென்பதெதற்கு நீரோடைச் சருகென நீ கொண்ட மதமெலாம் போர்வைதானோ மனிதாபமில்லா மனம் சூடும் நாமெல்லாம் மாந்தர்தானோ நால்குலம் மதமெலாம் நல்லுளம் சூடிய நாயகரகளுக்கோ நாமெலாம் அம்மேதை குலமதில் வெரும் சீடராகவோ நீ கொள்ளு தந்திரமில்லா சுதந்திரம்-நீடூழி வாழுமதமதற்காய் நீர்பூத்த பூமியென இப்பார் பூக்கட்டும் மதம் கையாண்ட மாந்தர்களால் மதம் கொண்டு நம்ப மாந்தர் கொண்ட பண்படா மனிதாபிமான மன்னிக்கும் பேர்ப்பன்பு -அதுவும் ஓரன்பு பொறாமை கொள்ளா பெருமை எல்லாம் மாணுடர்கள் மதத்தை நம்ப கை கொண்ட பண்படா நம்பி நீ கொள் களிறு கொண்ட தும்பி என துதி பாடவும் உளமதற்கு பக்க பலமாய் மீதமிருக்கு மன்னித்து நீ கண்ட மாந்தரெலாம் மடிந்ததிலை மண்ணுக்குள்ளிருந்தும் மறைவிலா வாழ்வுதனில் மதம்மேல் கொண்ட பற்றினால் நம்பிக்கையாய் நம்பிக்கை கொள் நம்பிக்கை என்றும் நம்பிக்கை கொள்ளா உள்ளங்களையும் நம்பிக்கை கொள்ளச் செய்யும் நம்பிக்கை கொண்ட உன்னிடம்
Insam Imamudeen