ஒரு மதம் அல்லது நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரற்கான மன்னிப்பு ,பொறுமை மற்றும் நம்பிக்கை போன்ற மனிதாபிமான குணங்கள் ************************** மனிதனுள் மனிதம் கொண்டு வாழ்ந்திடு, மனதினை நல்லெண்ணம் கொண்டு நிறைப்பிடு, வெற்றியை காண பொறுமையை வளர்த்திடு, வெறுப்பை நீக்க பொறுதியை வளர்த்திடு விதைக்கும் விதைகளாய் மனிதத்தை விதைத்திடு, வாழும் பொழுதிலே மன்னித்து வாழ பழகிடு, இடம் மாறினாலும் தடம் மாறாமல் உனை காக்க-மனதநேய பண்பினை வளர்த்திடு மதியினை கூறாக்கி உன் எதிர்கால விதியன் வழியினை வகுத்திடு, சதியுடன் காண வழியினை வகுத்திடு போட்டியின் வழியிலே வென்றிட பழகிடு, மனிதம் மறந்து முகமூடி அணிந்து வென்றிட எண்ணாதே வறுமை திறமைகளை கட்டி போட்டது சாதிக்க வேண்டும் என்ற கனவை வெட்டி போட்டது, தடைகளை கடந்து வெற்றி சூடுபவனாய் மாறிடு பிறப்பின் வழியிலே உதித்த மதம், இறப்பின் வழியிலும் தொடர்ந்தே வரும், சினம் கொண்டார் யாரும் அடையவில்லை சிகரம் , குணம் கொண்டு பொறுமை பூண்டாரே அடைந்திடுவார் சுதந்திர வாசலினை.