ஒரு மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்திற்கான மன்னிப்பு, பொறுமை மற்றும் நம்பிக்கை போன்ற மனிதாபிமானகுணங்கள்* மதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? எல்லாக் கல்வி முறையிலும் மதக்கல்வி மிக முக்கியமான அம்சமாய் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் என்ன? மதம் என்பது முதலில் பிரதிபலிப்பது ஒருவருடைய நம்பிக்கையையே எவ்வாறென்றால் ஒருவர் தான் படைக்கப்பட்டது ஒரு கடவுளினால் என நம்பிக்கை கொள்கின்றான். அந்நம்பிக்கை அவனை ஏதோ ஒரு வகையில் ஒரு கடவுளை வணங்க வைக்கிறது. எல்லா மனிதனும் ஏதோ ஒரு வகையில் ஒரு கடவுளை வணங்குகின்றான். அந்த நம்பிக்கையே ஒரு மதமாகக் கருதப்படுகிறது. மதம் பற்றிய நம்பிக்கை இல்லாதவணை நாத்திகன் என்கின்றோம். ஒரு மதத்தை பின்பற்றுபவன் சிறந்த மனிதாபிமானம் என்பது ஒரு மனிதனிடம் கட்டாயமாகக் காணப்பட வேண்டியதாகும். மனிதாபிமானக் குணங்களாக அன்பு, கருணை, மன்னிப்பு, சுதந்திரம், பொறுமை, மற்றும் நம்பிக்கை என்பவற்றைக் கூறலாம். "கடவுளிடம் நம்பிக்கை இல்லாதவணை நாத்திகன் என்று பழைய மதங்கள் கூறின. ஆனால் தன்னம்பிக்கை இல்லாதவனையே நாத்திகன் என்று புது மதம் கூறுகின்றது" என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இது ஒருவன் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக வலியுறுத்திக் கூறுகின்றது. அதாவது நம்பிக்கை என்பது மனிதாபிமானக் குணங்களில் ஒன்று என்பது ஒரு நம்பிக்கையின் மூலமே பிறக்கின்றது என்பதுவும் தெளிவாக விளக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது "எப்பொழுது நம்பிக்கை நழுவி விடுகின்றதோ, புகழ் புதைந்து விடுகின்றதோ அப்பொழுதே மனிதன் மாண்டு விடுகின்றான்" என விற்றியரின் கூற்று உணர்த்துவது என்னவென்றால் ஒரு மனிதன் நம்பிக்கை இழக்கும் போது அங்கே மனிதாபிமானமும் இழக்கப்படுகின்றது. இங்கு மனிதாபிமானம் இழக்கப்படும் போது மனிதன் மாண்டு விடுவதாகக் குறிப்பிடபட்டுள்ளது. நம்பிக்கை என்பது முதலில் தம்மிடத்தே வைக்கப்பட வேண்டும் அதன் பின்பாகவே பிறரிடமும் மாற்றையவற்றின் மீதும் வைக்கப்பட வேண்டும் இதையே "தன்னைப் பற்றி தெரிந்தவனுக்குத்தான் பிறரில் நம்பிக்கை எற்படும்" என ட்ரைடன் மிகத் தெளிவாக இவ்வுலகிற்கே உணர்த்தியுள்ளார். மனிதாபிமானக் குணங்கள் பல காணப்பட்டாலும் ஒரு மனிதனை முதலில் முழுமைடையச் செய்வது நம்பிக்கையேயாகும். ஏனெனில் ஒருவன் தன்னை நம்பும் அளவுக்கு அவன் முயற்சி செய்தால் முன்னேற்றம் காணலாம். தன்மீது அல்லது பிறவற்றின் மீதோ நம்பிக்கையின்றி வாழும் போது அவனிடத்தில் பாரிய பிரச்சினைகள் எற்படும். நம்பிக்கை இல்லாத போது அவனால் சவால்களுக்கு முகக் கொடுக்கவும் முடியாது திண்டாடுவான். எனவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் மனிதாபிமானம் அதாவது நம்பிக்கை கட்டாயம் காணப்பட வேண்டும். அத்துடன் ஒரு மனிதன் எவ்வளவு நம்பிக்கையுடன் ஒரு மதத்தைப் பின்பற்றி வாழ்ந்தாலும் அவனிடத்தில் பொறுமை காணப்பட வேண்டும். பொறுமை இல்லாதவன் மனிதாபிமானமே அற்ற ஒருவனாக சமூகத்தில் கணக்கிடப்படுவான். எவ்வாறெனில் ஒருவன் பொறுமை இழக்கும் போது அவனிடத்தில் அதிகளவான தீய செயல்கள் உருவாக்கப்படுகின்றன. பொறுமை இழக்கப்படும் போது கோபத்தின் உச்சக் கட்டத்திற்குச் செல்கின்றான். ஒரு மனிதனுக்கு கோபம் எற்படும் போது அவன் செய்வது சில வேளைகளில் அவனுக்கே தெரியாது போய்விடும். இவ்வாறான நிலைமையில் அவன் பிற மனிதர்களிடத்திலோ அல்லது பிற உயிரனங்களிடத்திலோ தனது கோபத்தின் உச்சத்தைத் தீர்க்கும் போது அங்கே பிற உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனாலேயே நாமுன்னோர்கள் கோபம் வரும் போது தன்னை அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரன் எனக் கூறியுள்ளார்கள். ஆகவே எவ்வாறான நிலைமையிலும் பொறுமை காக்க வேண்டும் என்றே கூறினார்கள். அதாவது தன்னை அடக்கிக் கொள்ள வேண்டும். தன்னடக்கம் என்பது பொறுமை உள்ள மனிதனிடத்தே உயர்வாகக் காணப்படும் ஒரு நற் பண்பாகும். "பொறுத்தார் பூமியாள்வர் பொங்கினார் காடாள்வார்" என நம் முன்னோர்கள் ஒரு பழமொழியாகவே நம் சமூகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார்கள். ஒரு மனிதன் எவ்வளவு பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் அது எந்தளவிற்கு நமக்கு நன்மை பயக்கும் என்பதை அவர்களின் வாழ்வியல் அனுபவங்களிலிருது எமக்குத் கற்றுத்தந்துள்ளார்கள் என்பதை சற்றே சிந்திக்க வேண்டும். பொறுமை என்பது எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் கடைபிடிப்பது கஷ்டமான ஒன்றாக இருப்பினும் நாம் அதிகளவில் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் அது நமக்கு பெரிதும் வெற்றியைத் தரக் கூடிய ஒன்றாகும். "பொறுமை என்பது ஒரு கசப்பான காய் ஆனால் அது கனிந்தால் மிக இனிமையானதோர் பழமாகும்" என்ற ரூசோவின் கருத்து மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதாவது வெற்றியின் முதல் படியே தோல்விதான் என மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகின்றது. ஆனால் அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள பொறுமை தேவைப்படுகின்றது. பொறுமையில்லாமல் இருந்தால் அடுத்து நடக்காபோவதை யோசித்து முன்னேற முடியாது. தோல்வியை ஏற்றுக்கொள்ள அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசிப்பதற்கும் பொறுமை உதவுகின்றது. இவ்வாறு நம்மிடையே பொறுமை எனும் மனிதாபிமானம் உள்ள குணத்தை நம்மிடையே வளர்த்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இன்று நம்மவர்களிடத்தே மனிதாபிமானம் என்பது அற்றுப் போன ஒன்றாகவே காணப்படுகின்றது.காரணம் மனிதாபிமானக் குணங்கள் சிறிது சிறிதாக குறைந்து மனிதாபிமானமற்று மிருகத்தனம் நம்மவர்களின் இரத்தத்தில் கலந்து பிறவற்றை கொடுமை செய்கின்றது. சிலர் மதவெறி கொண்டு சிலரை அடக்க முற்படுகிறார்கள். சிலர் அயல் விட்டாரைக் கூட துன்புறுத்தவும் மனதைப் புண்படுத்தவும் முயல்கிறார்கள்.காரணம் அவர்கள் வேறு மதம் என்கிறார்கள். மதம் என்பதே ஒரு மனிதனை அமைதிப்படுத்துவதுதா ன்.ஒருனை மனிதனாக வாழ்வதற்கு வழி கொடுப்பதே. இதை தடுக்கும் உரிமை இன்னொருவருக்கு எப்படி வரலாம். ஒருவரை தவறான நம்பிக்கையை வைத்து வழிபட்டாலும் அது அவரது சுதந்திரம் அதற்கான மன்னிப்பு கொடுத்தே ஆக வேண்டும். ஒருவருக்கான தனி மனித சுதந்திரம் என்பது அவர் எவற்றின் மீது நம்பிக்கை வைக்கத் தோன்றுகின்றதோ அதை அவருக்கு விட்டுவிடுவதிலேயே ஆரம்பிக்கின்றது ஆகவே ஒரு மனிதன் ஒரு மதம் அதாவது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கு சுந்திரம் வழங்கியாக வேண்டும் இதுவும் மனிதாபிமானமே. சிலர் மனிதாபிமானம் என்பதே இல்லாதளவில் நடப்பதற்குக் காரணம் அவர்களின் அறியாமை என்று கூட சொல்லளாம். சிலர் அறியாமையின் காரணமாகவே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் ஒரு மனிதாபிமானம் அற்ற மதம் பற்றிய நம்பிக்கை அற்ற ஒரு சமூகம் முன்னேற்ற பாதையில் செல்லவில்லை அவர்கள் வாழ்வில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவார்கள் இதனையோ "மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெருந்தடை அறியாமை தான் அறிவைத் தூண்ட வேண்டும்.அறியாமை ஓர் இருட்டறை" என நம் முன்னோர்களில் ஒருவரான மாந்தேன் குறிப்பிட்டுள்ளார். அறியாமையினாலும் பொறுமை இழக்கப்படலாம் நம்பிக்கை இல்லாத நிலை தோன்றலாம். இதன் போது மனிதாபிமானமும் அற்றுப் போகலாம். "இன்புற்று இருப்பதற்கான வழியை மனிதன் கண்டு பிடிக்கவில்லை ஏனையோறுக்கு ஏதாவது நலன் செய்வதன் மூலம் இன்புற்றிருக்க முடியும்". வினோபாஜி அதாவது இன்பமாக வாழும் வழி நமக்குத் தெரியாது. ஏனையோருக்கு நலம் கருத் மனிதாபிமானத்தோடு வாழ வேண்டும் என்பதைக் கூறுகிறார். மற்றும் ஒரு மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் நாம் வழங்க வேண்டும். பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள்,உறவினர்கள்,கணவன், மனைவி, அயலவர்கள் என யாராக இருப்பினும் அவர்களுக்கான சுதந்திரம் வழங்க வேண்டும்.அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். "இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு" என சுந்தரர் கூறியுள்ளார். அதாவது ஒரு மதத்தை பின்பற்றி வாழும் போது அம்மதம் கூறுகின்ற நல்லொழுக்கங்களைப் பின்பற்றும் போது நம்பிக்கையோடு இறைவனை வணங்கும் போது வாழ்க்கையும் இன்பமாகின்றது. மனிதனை மனிதனாக்குவது உடல் வளர்ச்சியல்ல எண்ண வளர்ச்சியே ஒரு மனிதன் அவ்வளவு தான் உடலால் வளர்ந்திருந்தாலும் அவன் ஒரு சிறந்த மனிதாக கருதப்பட மாட்டான். அவனது எண்ணம் சிறந்ததாக எப்போது அமைகின்றதோ எப்போது மனிதாபிமானத்தோடு வாழப் பழகுகிறானோ அப்போது அவன் ஒரு சிறந்த மனிதனாகக் கருதப்படுகின்றான். ஆகவே ஒரு மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் வழங்குவதோடு நாமும் பின்பற்றி பொறுமையுடன் நம்பிக்கையுடனும் சிறந்ததொரு மனிதனாக மனிதாபிமானம் உள்ளவராக வாழப் பழகிக்கொள்வோம்.