மத சுதந்திரம்
மத சுதந்திரம் பள்ளிக்கூட வரிசையில் பட்டையணிந்தவனும் பரிசுத்தம் பாடியவனும் பள்ளிவாசல் சென்றவனும் பசும் வெள்ளாடையில் ஒருவனுமாய் நிற்க.... காதருகில் ஓடிவந்த தென்றல் காதலுடன் வருடியது மூக்கை துளைவழி ஓடிச்சென்று மறுபடியும் துளைத்தது மற்றொருவன் நாசினுள்... இருளில் பெற்ற சுதந்திரத்தைக்கொண்டு பகலை இருளாக்க தேடுகிறது மனிதம் மரணித்த மதம்... மொழியேதுமறியா ஜீவனது அறிகிறது பிதிரும் வேதமும் பைபிளும் குர்ஆனும் பிரித்து ஓதுவது ஒற்றை சம்மதத்தையென்று... காற்றும் காகிதமும் இன்னும் கைகுலுக்கி கடக்கின்றன மதமும் மொழியும் வேற்றுமை கடந்ததென்று.... மாண்ட யாக்கையும் மரணத்தை வென்றுவிட்டது பேதமின்றி தென்றலும் ஒவ்வொரு கல்லறைக்கும் ஒற்றுமை கீதம் பாடுகையில்... மதம்பிடித்த மதமும் இன்று தலை குனிந்தது... மனிதம் வென்றுவிட்டது மதம் அது மனிதம் என்று...