ஒரு மதம் அல்லது நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம் என்பது ஒருவரின் கருத்துக்களைக் கொண்டு அவரின் நம்பிக்கைகளைப் பற்றி அவரின் மனதைப் பேச முடியும். பொதுவாக மதம் என்பது எமது தற்போதைய மனித அனுபவத்தை மிஞ்சிய ஒரு வாழ்க்கையைப் பற்றிய தெளிவான நம்பிக்கைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு தனிமனிதனை பொறுத்தவரையிலும் மதசுதந்திரம் உள்ளது. அதாவது தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை. இவ்வுரிமை மனித வாழ்வில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.இதனை யாராலும் மறுக்கவோ பறிக்கவோ முடியாது.அவ்வாறு நிகழ்கின்ற சமயத்தில் அதற்கெதிராக எமக்கு குரல் கொடுக்கவும் முடியும். இம் மத சுதந்திரம் என்பது உண்மையில் ஆழமான , பரந்த மற்றும் பெரும்பாலான மக்கள் உணர்வதை விட முக்கியமானது ஒரு மதத்தை அல்லது நம்பிக்கையை பின்பற்றும் சுதந்திரமானது சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும் ஒரு மனித உரிமையாகும். மேலும் ஒருவர் தாம் ஒன்றை ஆழமாக நம்புவதை வெளிப்படுத்தவும் , மத சுதந்திரம் நம் நம்பிக்கைகளைப் பற்றி நம் மனதை பேசவும், நாம் நம்புவதை பயிற்சி செய்யவும் அனுமதிக்கிறது. ஒரு மதத்தை அல்லது நம்பிக்கையை பின்பற்றுவதால் எம்முன் பல வகையான மாற்றங்கள் உருவாகின்றன. உதாரணமாக கூறப்போனால் அன்பு கருணை எனும் சக்தி என்னுள் பிறக்கிறது. மேலும் ஒற்றுமை நல்லிணக்கம் , பொறுமை போன்ற இன்னும் பலவாறான விடயங்களை எம்முன் உருவாக்கின்றது. மதங்கள் என்பது சமுதாயத்தால் ஆனது மற்றும் இதனை பின்பற்றுபவர்களை மீன் மக்கள் எனப்படுவர். ஆன்மீகத்தை புரிந்து கொண்டு உங்களை வளர்க்க மத சுதந்திரம் உதவுகிறது. ஒவ்வொரு மதமும் நல்ல விடயங்களையே போதிக்கின்றது. ஆகவே நாம் திறந்த மனதுடன் அனைத்து மதங்களையும் பார்க்க வேண்டும் . படிக்க வேண்டும். மக்கள் எதை நம்ப விரும்புகிறார்களோ அதை சந்திக்க மற்றும் நம்புவதற்கு ஒரு உள்ளார்ந்த உரிமை உள்ளது . மத சுதந்திரம் மற்றும் அதன் முக்கியத்துவம் நமது மனித உரிமைகளின் ஒரு பகுதிகளாகும் . மற்றும் இது அனைத்து சமுதாய மக்களுக்கும் பயனளிக்கின்றது. இது அமைதி ஜனநாயகமாக்கல். வளர்ச்சி மற்றும் பிற மனித உரிமையை மதிக்கும் தன்மையை உருவாக்கிறது. கடவுளை நம்புகிறோம் என்று வாயால் மாத்திரம் கூறினால் போதாது அதனை அர்த்தப்படுத்த வேண்டும் . அனைத்து மக்களையும் சமமாக நடத்தவும் இச்சுதந்திரம் உதவுகிறது . மதச் சுதந்திரத்தை சரியாக புரிந்து கொண்ட ஒருவன் பொறுமையை தன் ஆயுதமாக கொண்டிருப்பான். வாழ்வில் சகித்துக் கொள்ள முடியாத கஷ்டம் வந்தாலும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் வாழ்வான் . மேலும் பல அநீதிகள் இழைக்கப்பட்ட போதும் அவர்களை மன்னித்து இறைவன் பால் மீளுவான். ஆகவே எதனையும் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது . மத சுதந்திரம் என்பது மதத்திலிருந்து விடுபட்ட சுதந்திரம் அல்ல என்பதை புரிந்து நடக்க வேண்டும். மற்றவர்களின் பொறுப்பு மற்றும் மரியாதை மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகளும் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். அனைத்து நம்பிக்கைகளுக்கும் சமமான மரியாதையை வழங்குவது மிக முக்கியமாகும். எல்லா மதங்களும் சமம் என்பதால் எல்லா மக்களும் சமம் என்கிறோம். மற்றும் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது இனவெறிக்கு எதிரானது . இதன் நோக்கம் சகிப்புத்தன்மை இல்லை. மரியாதை கமலும் நீங்கள் இருக்கும் மதத்தில் அல்லது பின்பற்றும் நம்பிக்கையில் வசதியாக இருந்தால் மற்றவர்களுடன் கலக்கலாம். ஏனென்றால் உங்களை கலாச்சார ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வகைப்படுத்தும். " ஒரு மதத்தை பின்பற்று அனைத்தையும் மதி " என்ற சிந்தனையுடன் என்றுமே செயற்பட்டு மத சுதந்திரத்தை பேணி வாழ்வோம். " நீ இந்துவாக இரு , கிறிஸ்துவனா க இரு , இஸ்லாமியவனாக இரு எம்மதத்தை சார்ந்நவனாக இருந்தாலும் அம்மதம் உனக்கு அடுத்த மதத்தை இழிவுப்படுத்த சொல்லித் தரவில்லை என்பதை மட்டும் நினைவில் கொள் ..... "