மனிதநேய விதை கீறி மனிதம் எனும் தேர் ஏறி மதம் விதைப்போம்- மனிதா! மாதவம் தேவையில்லை ஆதவன் உதிப்பதற்கு மதம் கொண்டு திரியாதே- மனிதா! விடப்பாம்புகளை விழிகளில் நிறைத்து , மதப் பகைகளை மனதுக்குள் புதைத்து , மதம் வளர்த்து என்ன பயன்? மதமெனும் வயலினிலே மன்னிப்பு விதைகள் மரமாகி வளர வேண்டும், நெஞ்சின் ஈரம் கொஞ்சம் தூவும் அது மட்டும் போதும். மலர்கள் வாசம் வீசும். மதங்கள் நேசம் வீசும். வாடிவிழும் நேரத்திலே ஓடிவிடும் வாச நேசம், பொறுப்பது மலரின் குணம் பொங்குவதா மதத்தின் குணம்? சிரிப்பது மலரின் குணம் சிந்தித்தால் யாருமில்லை இங்கே பிணம், கடவுளை நம்பு காப்பாற்றுவார் கட்டாயமாக, கருத்துக்களை கடைந்தெடுக்க வேண்டும் கவனமாக, நம்பிக்கை என்பது ஏடு அதை நீயும் நாடு! மனிதா! மண்ணோடு உக்கும் வேர்களுக்கும் உண்டு மண்ணின் மேலொரு நம்பிக்கை. பிரிக்க நினைப்பதோ பிளக்க நினைப்பதோ சாதி வெறி, இன வெறி, மத வெறி, தூண்ட நினைப்பதோ மதத்தின் மதியிலில்லை. ஆரோக்கிய கருத்து வேர்களை நேராக்கியே சிரித்து வாழ்ந்திடுவோம்.